மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பத்திரப் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தியின் மூத்த மகனான பி.எம்.தியானேசுவின் திருமண விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கேரளாவிலிருந்து சாது மற்றும் நாராயண குட்டி என்ற இரண்டு ஆண் யானைகள் வரவழைக்கப்பட்டு முதல்வரை வரவேற்றன. தனியார் விழாக் களில் யானைகள் பயன்படுத்த, தடை விதிக்கப்பட்ட நிலையில் அமைச்சரின் மகன் திருமண விழாவுக்கு யானைகள் எப்படி கொண்டுவரப்பட்டது என கேள்வியெழ... மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அமைச்சர் மூர்த்தி. சமூக ஆர்வலர் மருதுபாண்டி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வனத்துறையிடம் சில கேள்விகள் எழுப்பியிருந்தார். “வளர்ப்பு யானைகள் திருமண நிகழ்வில் பங்கேற்க அனுமதி உண்டா?” என்ற கேள்விக்கு, அனுமதி இல்லை என வனத்துறை சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/elephant_13.jpg)
இதேபோன்று, மதுரை மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களிலிருந்து கடந்த 2022 ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் 2022 செப்டம்பர் 15-ஆம் தேதி வரை வளர்ப்பு யானைகள் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கு, கேரள மாநிலத்திலிருந்து, மதுரைக்கு இரண்டு யானைகள் கஜபூஜைக்கு கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டது எனவும் பதிலளித்துள்ளனர்.
மதுரையில் 2022 செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்ற திருமண விழாவிற்காக கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட யானைகளைக் கண் காணிக்க மதுரை வனச் சரகம் சார்பாக நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் பெயர், பதவி விவரங் களை தகவலாகத் தரவும் என்ற கேள்விக்கு. மதுரை வனக்கோட்ட வன உயிரின வனச்சரக அலுவலர் என பதிலளித்துள்ளனர். இந்த தகவல் அறியும் உரிமை சட்டக் கேள்விக்கான பதிலில், இரு யானை கள் கேரளாவிலிருந்து கஜபூஜைக்கு கொண்டு வந்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், செப். 9-ஆம் தேதி திருமண விழாவில் பங்கேற்ற யானைகளைக் கண்காணித்த அதிகாரிகள் குறித்த கேள்விக்கும் பதி லளித்துள்ளனர். இந்த நிலையில், திருமண விழாவில் முதலமைச்சரை வரவேற்பதற்காக கஜ பூஜை என்ற பெயரில் கேரளாவிலிருந்து யானைகள் அழைத்து வரப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வழக்கறிஞர் குமார், "கஜபூஜை செய்வதாக மீனாட்சியம்மன் கோயில் சார்பாக கேரள அரசிடம் அனுமதி வாங்கி விட்டு, அமைச்சர் மூர்த்தி வீட்டுத் திருமணத்திற்கு சட்டத்தைமீறி யானையைப் பயன்படுத்தியது தவறு. அமைச்சராக பதவியேற்கும் போது அரசியல் சட்டதிட்டத் திற்கு உட்பட்டு நடப்பேன் என்று உறுதிமொழி எடுத்துவிட்டு தற்போது அதற்குமாறாக நடப்பது குற்றம். இதுகுறித்து வழக்கும் தொடரவிருக்கிறேன்''’என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/elephant-t_0.jpg)